தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு! - கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கனிமொழி எம்.பி. மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் உள்பட 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு!
கரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பி. கனிமொழி மீது வழக்குப்பதிவு!

By

Published : Dec 22, 2020, 2:42 PM IST

தூத்துக்குடியில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிரணி சார்பில் நேற்று (டிச. 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமை தாங்கினார். இதில ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி அரசியல் அமைப்புகள் திறந்தவெளியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் கரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக கனிமொழி எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா உள்பட 2500 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...‘என் சாவுக்கு காரணம் மனைவி’ - எழுதி வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details