தொழிலாளர் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு ஆலோசித்துள்ளது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொழிலாளர் சங்கங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றன.
இந்தநிலையில் மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி சிஐடியு சார்பில் மாசிலாமணிபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிற்சங்க உதவித் தலைவர் மணவாளன் தலைமை தாங்க, நிர்வாகிகள் பெருமாள், ஆறுமுகம், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலை நேரத்தை 12 மணியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்! இதுகுறித்து சிஐடியு நிர்வாகி ஆறுமுகம் கூறுகையில், 'மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், பல்வேறு தியாகங்களின் விளைவாக கிடைத்த 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசின் இந்த ஆலோசனையை உடனடியாக கைவிடவேண்டும். இல்லையெனில் நாடு முழுவதும் சிஐடியு சார்பில் மத்திய அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
இதையும் படிங்க...இஸ்லமாயிர்கள் குறித்து அவதூறு விளம்பரம் - கம்பி எண்ணும் பேக்கரி உரிமையாளர்