கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி காரியாலயம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். ரயில்வே மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காரியாலயத்தை திறந்து வைத்த பின் அவர் பேசியதாவது,
'2ஜி ஊழல்வாதிக்கு மக்கள் ஆதரவு இருக்காது' - பியூஷ் கோயல் - தூத்துக்குடி வேட்பாளர்
தூத்துக்குடி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த ஒரு நபரை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில்பாஜகஒரு மகத்தான வெற்றி பெறப் போகிறது. ஏனென்றால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மகத்தான கூட்டணியாக தேர்தலை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.பாரதியார் பிறந்த மாவட்டம், அவர் தீண்டாமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். பாரதி என்ன கனவு கண்டாரோ அதே கனவு தான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கிறதுஎன்றார்.
திமுகவும், காங்கிரசும், நமது நாட்டில் ராணுவத்தின் வல்லமையை, ராணுவ வீரர்களின் துணிச்சலை,இப்படிப்பட்ட துல்லிய தாக்குதல் நடந்ததா? என்று கேட்கிறார்கள். 10 ஆண்டுகளாக திமுகவும், காங்கிரசும் நாட்டையே கொள்ளையடித்ததார்கள் என்பது தெரியும். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த ஒரு நபரை, தூத்துக்குடி மக்களவைதனது உறுப்பினராகத் தேர்ந்து எடுத்துவிடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரும்ப திரும்ப ஊழல் வேட்பாளர்களுக்கு நாம் வாக்களித்தால் நமது நலன்கள் கேள்விக்குறியாகிவிடும், என்றார்.