தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் தனியார் ஆலை ஊழியர்கள் 57 பேருக்கு கரோனா!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றும் 57 பேர் உள்பட 80 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கவனம் தேவையே தவிர கவலை அல்ல: கோவில்பட்டியில் தனியார் ஆலை ஊழியர்கள் 57 பேருக்கு கரோனா!
கவனம் தேவையே தவிர கவலை அல்ல: கோவில்பட்டியில் தனியார் ஆலை ஊழியர்கள் 57 பேருக்கு கரோனா!

By

Published : Jul 23, 2020, 8:36 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நேற்று முன்தினம் (ஜூலை21) வந்த பரிசோதனை முடிவில் 57 ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், நகராட்சி சுகாதார அலுவலர், அம்மா உணவகத்தில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் என 80 பேருக்கு கோவில்பட்டியில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அம்மா உணவகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அம்மா உணவகம் மூடப்பட்டது. இதனால் அதன் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் அம்மா உணவகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்

ABOUT THE AUTHOR

...view details