தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட தென்னம்பட்டி பகுதியில் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டத்தை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "தென்னம்பட்டியில் துணை மின் நிலையம் சோதனை ஓட்டமாகத் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், ஆயிரத்து 682 துணை மின் நிலையங்கள் உள்ளன.
சோதனை ஒட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவைக்கேற்ப துணை மின் நிலையத்தை அமைப்பதும் பசுமை வழித்தடத்தை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.மேலும் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் காரணமாக தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தகவல் தவறானது. தற்பொழுது முழுவதுமாக டெண்டர் முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு மின்சாரம் வாங்கப்படுகிறது.
தென்னம்பட்டியில் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்ட விழா சில தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களுடைய நிர்வாகக் காரணங்களாக இயங்காமல் இருக்கலாம். பசுமை வழித்தடத்தை உருவாக்கித் தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளோம். அதுபோல், தமிழ்நாட்டில் 120 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு கொடுப்பதை 500 மெகாவாட்டாக அதிகரிக்க கேட்டுள்ளோம்.
மூன்றாயிரம் மெகாவாட் சோலார் மின் உற்பத்தியை ஆறாயிரம் மெகாவாட்டாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உடன்குடி மின் திட்டம் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பின்பு தற்பொழுது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. 2023-க்குள் இந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம்... மின் பகிர்மான கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!