தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது - வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி: வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

One held in lottery sales
One held in lottery sales

By

Published : Apr 25, 2021, 1:44 PM IST

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருக பெருமாள் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வெளிமாநில லாட்டரியை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வது தொடர்பாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் மேற்கொண்ட சோதனையில், தூத்துக்குடி சின்னகோவில் அருகே, குமாரகிரி தேரி சாலைப் பகுதியைச் சேர்ந்த சூரத்குமார் (42) என்பவர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரியை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருக பெருமாள் வழக்குப்பதிவு செய்து சூரத்குமாரை கைதுசெய்தார். மேலும் அவரிடமிருந்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், இருசக்கர வாகனமும், செல்போனும் பறிமுதல்செய்யப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details