தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு - தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் இறங்குதளம் விரிவாக்கம் பணிகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஐ.ஜி, டி.ஐ.ஜி திடீர் ஆய்வு
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஐ.ஜி, டி.ஐ.ஜி திடீர் ஆய்வு

By

Published : Jul 9, 2021, 12:13 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வந்த சில விசைப்படகுகள், தருவைகுளம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து மீன்பிடி தொழில் செய்யாமல் முறைகேடாக தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. மீனவர்களுக்கு இடையே நிகழும் இந்த அசாதாரண சூழ்நிலையை சரி செய்ய மாவட்ட காவல்துறையின் சார்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

திடீர் ஆய்வு

இந்நிலையில் இன்று தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் இறங்குதளம் விரிவாக்கப் பணிகள், அதற்கு வகுக்கப்பட்டுள்ள திட்ட வரைபடங்களையும் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து படகு தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய அவர்கள் படகு இறங்குதளம் விரிவாக்கம் குறித்து கேட்டறிந்தனர்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: நீட் பாதிப்பு ஆய்வுக் குழு - வரம்பை மீறிய செயல்

ABOUT THE AUTHOR

...view details