தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடுக்கி நிலச்சரிவு, தேவையான உதவிகளை அரசு செய்யும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி - இடுக்கி நிலச்சரிவில் தூத்துக்குடி மக்கள்

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Aug 10, 2020, 2:14 PM IST

கேரள மாநிலம், இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது, “இடுக்கி நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் இரங்கலை தெரிவித்தது மட்டுமின்றி, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை தொடர்பு கொண்டு சிக்கியுள்ளவர்களை‌ விரைந்து மீட்க வேண்டும்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தூத்துக்குடி கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி கயத்தார் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன்.

அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்கநர் உன்னி கிருஷ்ணன் சம்பவ இடத்திலிருந்து அங்குள்ள விவரங்களை தமிழ்நாடு அரசுக்கும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் அளித்துவருகிறார்.

ஒவ்வொரு மணி நேரமும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்" என ஆறுதல் அளித்துப் பேசினார்.

இதையும் படிங்க:'மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணியில் கேரளாவுக்கு உதவ தயார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details