தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழ்நாடு முழுவதும் 24 நேரமும் வணிகக் கடைகள் திறந்திருக்க இன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு வரவேற்பு அளித்த விக்கிரமராஜா! - அரசாணை
தூத்துக்குடி: 24 மணி நேரமும் வணிகக் கடைகள் திறந்திருப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தான் வரவேற்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
vikramaraja
வணிகர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத வகையில் தமிழ்நாடு காவல் துறையினர் கடையில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பிறகும் இரவில் வணிகத்தில் ஈடுபடும் வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் வகையில் காவல் துறையினர் நடந்திடக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்