தூத்துக்குடி:இந்திய சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஸ்தூபி மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
“வைரமுத்துவின் கருத்தை ஆதரிக்கிறேன்” - வைகோ பேட்டி
Vaiko's opinion on tamil language in courts: தமிழக நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிடுவதோ தீர்ப்பு வழங்குவதோ இல்லை என்பது கொடுமை என வைரமுத்து கூறிய கருத்தை தான் ஆதரிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Published : Oct 17, 2023, 12:17 PM IST
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றென்றைக்கும் ஓங்கி ஒலித்து இருக்கும். எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்றார்.
சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது தனக்கு தெரியாது என பதிலளித்தார். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிடுவதோ, தீர்ப்புகள் வழங்கப்படுவதோ இல்லை என்பது கொடுமை என வைரமுத்து பேசியது தொடர்பாக கேட்கையில், வைரமுத்து பேசிய கருத்தினை தான் ஆதரிப்பதாக கூறினார்.