தூத்துக்குடி : கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சண்முகராஜ் (63). இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர் நேற்று (நவ.02) மழை பெய்து கொண்டிருந்தபோது மாலை 6 மணியளவில் தனது வீட்டின் மாடியில் துணி துவைத்து கொடியில் காயப் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பியில் மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி சுப்புலட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் சண்முகராஜ் மனைவி சுப்புலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.