தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மும்பையில் உயிரிழந்த கணவர் உடலை கொண்டுவர மனைவி கோரிக்கை! - உடலை மீட்டுதரும்படி மனவி கோரிக்கை

தூத்துக்குடி: ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பையில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசிற்கு இறந்தவரின் மனைவி கோரிக்கை.

husband-dies-as-a-result-of-curfew
husband-dies-as-a-result-of-curfew

By

Published : Apr 16, 2020, 10:26 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீனண்டான்பட்டியை சேர்ந்தவர் நாகையா. இவர் மும்பை தாராவி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் ஆண்டுதோறும் 8 மாதங்கள் மும்பையில் தனது மகன் காளிராஜியுடன் தங்கிருந்து வியாபாரம் செய்வது வழக்கம்.

கடந்த மாதம் கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவால் துணி வியாபாரம் செய்ய முடியாமல், இதுவரை கடனாக விற்பனை செய்த துணிகளுக்கான 2 லட்ச ரூபாய் பணத்தை வசூல் செய்ய வழி இல்லாமல் சில நாள்களாக நாகையா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 14ஆம் தேதி உடல் நலம் குன்றிய நிலையில் மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகையாவின் மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details