தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் பூட்டை உடைத்து உண்டியலை அலேக்காக தூக்கிச் சென்ற திருடர்கள் - கோவில்பட்டி கோயில் திருட்டு

தூத்துக்குடி: கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kovilpatti kovil hundial theft
kovilpatti kovil hundial theft

By

Published : Feb 5, 2020, 9:30 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புதுக்கிராமம் கோபாலபுரம் தெருவில் ஸ்ரீ காந்தாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூசாரியாக இருப்பவர் புதுக்கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து.

இவர் இன்று காலையில் வழக்கம்போல கோயிலுக்குப் பூஜை செய்ய சென்றபோது கோயிலின் உள்புறக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் இரண்டு அடி உயர சில்வர் உண்டியல் மாயாமாகியிருப்பது தெரிவந்தது.

திருடு நடைபெற்ற கோயில்

திருடு போன உண்டியலில் சுமார் ரூ. ஆறு ஆயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் போக்குவரத்து அதிகமாகச் செல்லும் பிரதான சாலையில் உள்ள கோயிலில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பக்கதர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'திட்டம் இரண்டு.. பலன் ஒன்று...' - இது பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான பிளான்

ABOUT THE AUTHOR

...view details