தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 6, 2022, 3:42 PM IST

Updated : Dec 6, 2022, 4:25 PM IST

ETV Bharat / state

பாலிதீன் பையில் டீ, காபி விற்றால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(டிச.6) முதல் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருட்களை பார்சல் செய்வதற்குத் தடை செய்து அதிரடி அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். மீறினால், ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனி பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு பார்சல் செய்யத்தடை; தூத்துக்குடி கலெக்டர் அதிரடி
இனி பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு பார்சல் செய்யத்தடை; தூத்துக்குடி கலெக்டர் அதிரடி

தூத்துக்குடி: இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று(டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் கொடுக்கும் பட்சத்தில் கேன்சர் போன்ற பல்வேறு வியாதிகள் வரும் என கடந்த மாதம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுத் தடை செய்யப்பட்டது.

மேலும், இன்று(டிச.6) பாலித்தீன் பேக்கில் டீ, காபி, சாம்பார் போன்ற வகைகள் சுட சுட கொடுக்கும் பட்சத்தில், நோய்கள் ஏற்படும். இது வயிற்றில் கலந்து வயிற்றுப் போக்கு, சிறுநீர் கற்கள், கேன்சர் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வழி வகுக்கும்.

அதனைத் தடுக்கும் பொருட்டு, நாம் பழைய முறைப்படி வீட்டில் இருந்து அலுமினிய தூக்கு வாளி போன்றவைகளை உணவகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதனை சாப்பிடும் விலங்குகளுக்கும் உடல் உபாதைகள் ஏற்படும். ஆகவே, இதனை கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதித்து குற்ற வழக்குப் பதியப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: லஞ்சமா? ஒரு வாட்ஸ் அப் போதும்.. தூத்துக்குடி ஆணையர் அதிரடி!

Last Updated : Dec 6, 2022, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details