தூத்துக்குடி:மீளவிட்டான் கிராமத்தில், சட்டவிரோதமாக அரசு நிலத்தில் தேவாலயம் அமைக்க முயற்சிக்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
அவர் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் பயன்படுத்திவரும் அரசு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக தேவாலயம் அமைக்க 2015 முதல் 2020 டிசம்பர் வரை முயற்சி நடைபெற்றதாகவும், பின்னர் தூத்துக்குடி தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்ற பின்பு அந்த முயற்சியை அப்பள்ளி கைவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது தாசில்தாரின் உதவியோடு அந்த முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.