தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தனியார் இடத்தில் பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை, எட்டையபுரம் ஆகிய பகுதிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மதுரையை இரண்டாவது தலைநகரமாக அரசு அறிவிக்க வேண்டும். அதன் தொடக்கமாக தான் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைநகரமான மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெறாமல் உள்ளன. எனவே மதுரையை இரண்டாவது தலைநகரமாக அரசு உடனே அறிவிக்க வேண்டும்" என்றார்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "விநாயகர் சதுர்த்தி விழா என்பது பாஜக விழா இல்லை, இந்திய மக்களின் விழா. விநாயகர் சதுர்த்தி திருவிழா தேசிய ஒருமைப்பாட்டு பண்டிகை. அதற்கான அனுமதியை அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும். அது எந்த கட்சியுடனும் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுவெளியில் விநாயகரை வழிபட அரசு அனுமதிக்க வேண்டும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்