தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி: மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி
helmet awareness rally

By

Published : Dec 13, 2019, 3:20 PM IST

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் காவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், தென்பாகம் காவல்நிலையத்தில் தொடங்கி வைத்தார். மோட்டார் சைக்கிள் பேரணியானது நகரின் முக்கிய சாலையான பாளை ரோடு, கிரேட் காட்டன் சாலை வழியாக குரூஸ் பர்னாந்து சிலை முன்பு நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்ட காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக வந்து பொதுமக்களிடம் வழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்கள்.

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

மேலும், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும் காவல்துறையினர் கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ஹெல்மெட் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிக்க: 'நாசா' செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு ஏழ்மை தடை!

ABOUT THE AUTHOR

...view details