தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மாவட்டங்களின் பல பகுதியில் கனமழை பெய்துவருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்துவந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகக் குளிர்ந்த சீர்தோஷ்ண நிலை நிலவி வந்தது.
இந்த மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீ வைகுண்டம், கயத்தாறு, திருச்செந்தூர், ஆலந்தலை, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவந்தது.
இந்நிலையில் நேற்று (அக்.26) மாவட்டத்தில் இரவு 9.30 மணிக்குப் பெய்ய தொடங்கிய கனமழை, சுமார் 2 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.