இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியில் பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - மழை
தூத்துக்குடி: கடுமையான வெயிலின் தாக்கத்திற்குப் பின்னர் இன்று பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், தூத்துக்குடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 4) மாலையில் வெயிலின் சூடு தணிந்து வானில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. சுமார் 6.30 மணிக்கு துளித்துளியாக பெய்ய தொடங்கிய மழை சிறுது நேரத்தில் மிதமான மழையாக பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் தூத்துக்குடி, முத்தையா புரம், ஸ்பிக் நகர், தெர்மல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பச்சலனம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.