தூத்துக்குடி புது தெரு ஜார்ஜ் சந்துவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரைட்டன் (70). இவருக்கு மனைவியும், இரண்டும் பெண் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ஜார்ஜ் சந்தில் உள்ள 30 ஆண்டுகள் ஆன பழமையான பாரம்பரிய வீட்டில் பிரைட்டன் தனது பேர குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தூத்துக்குடியில் கனமழை: வீடு இடிந்தது! - rain news in thoothukudi
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து, மின்சாதன பொருள்களும் சேதமாகின.
இந்நிலையில் நேற்று (மே.08) இரவு தூத்துக்குடியில் கனமழை பெய்ததால், பிரைட்டன் வீட்டின் மேற்கூரையில் இருந்த விரிசல் வழியே வீட்டுக்குள் மழைநீர் வழிந்ததாக தெரிகிறது. இதனால் பிரைட்டன் தன் பேரக்குழந்தைகளுடன் அருகே இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின் நள்ளிரவு 2.30 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ததில் அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதனால் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, பீரோக்கள், சோபா மற்றும் பிற மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க:'சித்திரை வெயிலுக்கு ஜில்லென்று மழை' - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு