தெற்கு ஆந்திராவையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
தூத்துக்குடியில் பெய்துவரும் கன மழை இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நேற்றிரவு 10.30 மணியிலிருந்து தொடர்ந்து கன மழை பரவலாக பெய்து வருகின்றது.
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், பாளை ரோடு, பழைய மாநகராட்சி அலுவலகம், இரயில்வே ஸ்டேஷன் ரோடு, மில்லர்புரம், ஆசிரியர் காலனி, 3ஆவது மைல், பிரையண்ட் நகர், விவிடி மெயின் ரோடு, மட்டக்கடை, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்துப் பாதிப்பு!