தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து சென்ற ஹரி நாடாரிடம் விசாரணை! - Hari Nada

தூத்துக்குடி: அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்ததாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரி நாடார்

By

Published : Mar 26, 2019, 2:42 PM IST

Updated : Mar 26, 2019, 3:23 PM IST

மறைந்த நாடார் சமூக தலைவர் கராத்தே செல்வின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்காக தூத்துக்குடி வந்த நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார், விமான நிலையத்திலிருந்து நெல்லை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். விமான நிலையத்தை அடுத்து உள்ள சுங்கச்சாவடி பகுதியில் தாசில்தார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவருடன் வந்திருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நரேந்திர சிங் யாதவிடம் ஒரு துப்பாக்கியும் 36 தோட்டாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்ததாக நாடார் மக்கள் சக்தி இயக்க தலைவர் ஹரி நாடார் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை புதுக்கோட்டை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Mar 26, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details