இயக்குநர் கவுதமன் சமீபத்தில் தமிழ் பேரரசு கட்சியை தொடங்கினார். அதனையடுத்து நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து அதன்படி வேட்புமனுவையும் அவர் தாக்கல் செய்தார். கனிமொழி, தமிழிசை என்ற இரண்டு ஸ்டார் வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்க முடிவு செய்த கவுதமன் டெபாசிட் வாங்குவாரா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். ஆனால், மக்களை நம்பி களமிறங்கியிருக்கிறேன் என அவர் கூறிவந்தார்.
வேட்புமனுவை வாபஸ் பெற்றார் கவுதமன்
தூத்துக்குடி: கனிமொழி, தமிழிசை வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டது ஜனநாயக படுகொலை என கூறி தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் இயக்குநருமான கவுதமன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இயக்குநர் கவுதமன்
இதற்கிடையே வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றபோது கனிமொழி மற்றும் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்களில் முழுமையாக விவரங்கள் நிரப்பப்படவில்லை எனவே அவர்களது மனுக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் என கூறப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கு பின் அவர்களது வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன.
இந்நிலையில், கனிமொழி மற்றும் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஜனநாயக படுகொலை எனக் கூறி தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கவுதமன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.