தூத்துக்குடி:கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. அதன்படி, தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதிவரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த மே 13ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து திரவ ஆக்சிஜன் மருத்துவப் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்காலம் முடிந்ததாலும், தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாததாலும், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் பணிகள் நிறுத்தப்பட்டன.