தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 138ஆவது நாள் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தினசரி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனையடுத்து மணி மண்டபம் அருகே நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு, மகாகவி பாரதியார் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி சிறப்பித்தார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் 'அனைவருக்கும் வணக்கம், தமிழ் இனிமையான மொழி' எனத் தமிழில் பேசி, தனது உரையைத் தொடங்கிய பன்வாரிலால், 'தமிழில் பேச முயற்சி செய்து வருகிறேன். இன்னும் மூன்று ஆண்டுகள் இங்குதான் இருப்பேன். அதற்குள் தமிழ் கற்று விடுவேன். மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர். கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி ஒரு பத்திரிகையாளர்.