தூத்துக்குடி: புதுக்கோட்டை தாலுகா ஆலங்குளம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் மாரியப்பன் என்பவரது மகன் நாகரத்தினம் (வயது 47). இவர் கோவில்பட்டியில் நோய் தடுப்பு பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நாகரத்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நாகரத்தினம் மீது மோதி ஏறி இறங்கியது. இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.