தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு; அரசு அலுவலர் பதவியிறக்கம்!

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு செய்த யூனியன் துணை பிடிஓ, இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு

By

Published : May 27, 2022, 5:39 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பா.நாராயணன் என்பவர் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த காரணத்திற்காக தற்போது வகிக்கும் பதவியிலிருந்துகீழ் இறக்கம் செய்யப்பட்டு, இளநிலை உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார்.

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததைப் பாராட்டி, இதே போன்ற பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பிற பெண் அரசு ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வண்ணம் பணியிடத்தில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 பிரிவு 13 மற்றும் 15(அ)இன்படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து ரூ.10,000/- ஒரே தவணையில் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details