தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற நாகர்கோவில் பணிமனையைச் சேர்ந்த நான்கு அரசு விரைவுப் பேருந்துகள்,
திருநெல்வேலி பணிமனையைச் சேர்ந்த இரண்டு அரசு விரைவுப் பேருந்துகள் பாஸ்டேக்(FASTag) அட்டையில் பணம் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சுங்கச் சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாஸ்டேக் அட்டையில் பணம் இல்லாததால் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைப்பு ஓட்டுநர்கள் தங்களது உயர் அலுவலர்களுக்கு இது குறித்துத் தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, ஓட்டுநர்கள் பேருந்தை சுங்கச் சாவடி வழியிலிருந்து எடுத்து அருகில் நிறுத்திப் பயணிகளை வேறு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
காலை 4.45 மணிக்கு அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு 10.30 மணி வரை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பேருந்து சுங்கச் சாவடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Sexual harassment case: பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக சாட்சியம்