தமிழ்நாடு

tamil nadu

ஒரே நாளில் 5 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

By

Published : Sep 22, 2019, 8:32 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஜந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம்

தூத்துக்குடி பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த சிவக்குமார்(41) என்பவர் கடந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன்(29), அந்தோணி பீட்டர்(24), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த விக்னேசுவரன் என்ற விக்னே‌‌ஷ்குமார்(30), புதுக்கோட்டை குலையன்கரிசலைச் சேர்ந்த சத்யராஜ்(25), பேரூரணியைச் சேர்ந்த மருதவேல்(27) ஆகிய 5 பேர் உள்பட 14 பேரை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இவர்கள் ஜந்து பேர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து இவர்கள் ஜந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஜந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜே‌‌ஷ், அந்தோணி பீட்டர், விக்னேசுவரன், சத்யராஜ், மருதவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details