தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதிச்சநல்லூர் அகழாய்வு ; தங்க நெற்றிப்பட்டயம் கண்டெடுப்பு!

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு ; தங்க நெற்றிப் பட்டயம் கண்டெடுப்பு...!
ஆதிச்சநல்லூர் அகழாய்வு ; தங்க நெற்றிப் பட்டயம் கண்டெடுப்பு...!

By

Published : Aug 8, 2022, 4:02 PM IST

தூத்துக்குடி:ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்க நெற்றிப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். அலெக்சாண்டர் ரியா, தனது 1902ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் விவரித்த அனைத்து குணாதிசயங்களுக்கும் இது சரியாக பொருந்தும்.

இதனை இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. நீண்ட கூர்மையான இரும்புக்கருவி, சிறிய கூர்மையான அம்புகள், செப்பு கிண்ணங்கள் கிடைத்த நிலையில், இப்போது தங்க கிரீடம் கிடைத்துள்ளது. இது நிச்சயமாக சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பணக்கார கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு ; தங்க நெற்றிப் பட்டயம் கண்டெடுப்பு...!

இதையும் படிங்க: 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தூத்துக்குடி மாநகராட்சி!!

ABOUT THE AUTHOR

...view details