தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஹா சிவராத்திரி விழாவிற்கு சென்ற சிறுமி உயிரிழப்பு! - மின்சாரம் தாக்கி பலி

தூத்துக்குடி: மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ளச் சென்ற சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

girl-was-electrocuted-who-went-to-attend-the-maha-shivaratri-fest-in-thoothukudi
girl-was-electrocuted-who-went-to-attend-the-maha-shivaratri-fest-in-thoothukudi

By

Published : Mar 12, 2021, 5:21 PM IST

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே உள்ள சவேரியார்புரம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரம்யா(11) நேற்று(மார்ச்.11) மாலை அதே பகுதியில் உள்ள கோயிலில் ஒன்றில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள சென்றார்.

அப்போது சிறுமி கோவிலருகில் இருந்த மின்மாற்றியின் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த காவலர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சிறுமியின் குடும்பத்தினர் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து முத்தையாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கலைத்தனர்.

இதையும் படிங்க:வேலைக்குச் சேர்ந்து பத்து நாள்களுக்குள் உயிரிழந்த கேங்மேன்

ABOUT THE AUTHOR

...view details