தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் காரும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது 2 வயது மகள் தாமிரபரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் வந்த ஆதிநாதன்(58), சீதைஜானகி(50), வெங்கடேஷ்(30), ஶ்ரீவரமங்கை(28) ஆகியோர் படுகாயமடைந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.