தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையல், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் சுய சுத்தத்தை கடைபிடிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பொறுப்புக் கழகத்தின் உதவியின்பேரில் கொண்டுவரப்பட்ட ராட்சத இயந்திரம் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மேலும், இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
ராட்சத எந்திரம் மூலம் தெளிக்கப்படும் கிருமி நாசினி! இதையும் பார்க்க: ஊரடங்கிலும் அடங்காத கடத்தல்... உணவு டெலிவரி வண்டியில் இரண்டு தலை பாம்பு!