தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சாதனை!

தூத்துக்குடி: வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகினை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சாதனை
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சாதனை

By

Published : May 28, 2020, 11:32 AM IST

ஜெர்மன் நாட்டை சேர்ந்த எம்.வி. மரியா என்ற கப்பல் 151.67 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் 26ஆம் தேதி மதியம் 1.24 மணியளவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு இறக்குதளம் மூன்றில் வந்தடைந்தது.

இக்கப்பலில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த நோர்டிக்ஸ் இந்தியா எனும் காற்றாலை இறகு தயாரிப்பு நிறுவனம் 72.40 மீட்டர் நீளமுடைய காற்றாலை இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த காற்றாலை இறகினை 3 ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் பயன்படுத்தி கையாளப்பட்டது. இந்த காற்றாலை இறகுகள்
ஜெர்மனியிலுள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி என்ற நிறுவனத்திற்காக பெல்ஜியம் நாட்டின் ஆன்டேர்ப் துறைமுகத்திற்கு செல்லப்படுகிறது. இதன்மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகளை சரியாக ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன், வெளியிட்டுள்ள அறிக்கையில், "காற்றாலை உதிரிபாகங்களை கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளையும் துறைமுகத்தில் அமையபெற்றுள்ளது. மேலும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் வ.உ. சிதம்பரனார் துறைமுக நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக "தூத்துக்குடி ஸ்பீட்ஸ்" என்ற திட்டத்தின் மூலம் 1000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம்பெறுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தையில் விநியோகம் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2019-20 நிதியாண்டில் அதிக கப்பல்களை கையாண்டு வ.உ.சி துறைமுகம் சாதனை

ABOUT THE AUTHOR

...view details