தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வனிதா என்பவர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நானும் எனது கணவர் சுப்புராஜூம் மருத்துவ செலவிற்காக உள்ளூரில் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினோம்.
இதற்கு வட்டி அதிகளவில் கேட்டதால், இதனை அடைக்க மற்ற கந்துவட்டிகாரர்களிடம் பணம் வாங்கி ரூ.20 லட்ச ரூபாய் வரை வட்டி பெருகிவிட்டது. இதற்காக, எனது கணவர் சுப்புராஜ் வெளிநாட்டில் வேலை பார்ப்பது, பணம் அனுப்பி வருகிறார்.
இதனை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் என்னை மிரட்டி அதிக வட்டி கேட்கின்றனர். பலருக்கு வாங்கிய முதலை விட அதிகமாக பணம் கொடுத்தும், மீண்டும் மீண்டும் பண் கேட்டு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். மிரட்டுவது மட்டுமின்றி, அண்மைகாலமாக ஆபாசமாக பேசுகின்றனர். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிதர வேண்டும்"எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை கொடுக்கும் போது கண்ணீர் மல்க கோட்டாட்சியர் காலில் விழுந்துள்ளார்.
இதையும் படிங்க:தனியார் சிமென்ட் நிறுவனத்தின் மீது நடிகை சினேகா மோசடி புகார்!