தமிழ்நாடு

tamil nadu

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி ஒழிப்பு பேரணி!

By

Published : Oct 2, 2019, 5:22 PM IST

தூத்துக்குடி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் திரளான மாணவ - மாணவியர் கலந்துகொண்டனர்.

காந்தி ஜெயந்தி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகாத்மா காந்தியின் 150ஆவது ஜெயந்தியை முன்னிட்டு நகராட்சி சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெகிழி ஒழிப்பு பேரணி

பயணியர் விடுதி முன்பு தொடங்கிய இப்பேரணி மெயின்ரோடு, மாதங்கோவில்ரோடு, கதிரேசன்கோவில் ரோடு, பார்க் ரோடு வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மூன்று குழுக்களாகப் பிரிந்து சாலையேரங்களில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்கலாமே: மகாத்மா காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மரியாதை!

ABOUT THE AUTHOR

...view details