காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
‘தேர்தலில் யார் பணம் கொடுத்தது என்று கனிமொழிக்கு தெரியும்’ - கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கடம்பூர் ராஜு, அதிமுகவினர் பணத்தை நம்பியே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கனிமொழி கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். இதில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யார் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்பது தூத்துக்குடி மக்களுக்கு நன்றாக தெரியும். பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை என கனிமொழி சொல்லத் தயாரா? வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்தான் கனிமொழி. மற்றவர்களைப் பற்றி இவர் கூறுவது பொருத்தமாக இருக்காது’ என்று விமர்சித்து பேசினார்.
தொடர்ந்து பேசுகையில், அத்திக்கடவு அவினாசி திட்டம் காலம் காலமாக கனவு திட்டமாக இருந்தது. இப்படி திட்டங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வருவதைப் பார்த்து காழ்ப்புணர்ச்சியால் உண்மைக்கு மாறான தகவல்களை திமுகவினர் கூறி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.