மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்திருக்கும் காந்தி திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா - மக்களுக்கு கடலை மிட்டாய் கொடுத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ! - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி: கோவில்பட்டியில் 150ஆவது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா
இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கடம்பூர் ராஜூ கடலை மிட்டாய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து காந்தி மண்டப நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர், அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: ‘எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ - ஏங்கும் தாய்..!