தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவு நாள் இன்று (செப்.8) கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவீரன் சுந்தரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவுதினம்: கனிமொழி எம்பி மரியாதை - கனிமொழி எம்பி
தூத்துக்குடி: விடுதலைப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
mp
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு மாவீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கீதா ஜீவன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன், திமுக நிர்வாகிகள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.