தூத்துக்குடி:தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவன் கோயலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அப்பகுதி திருக்கோயில்களில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் விதமாக பல்வேறு திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முத்தையாபுரத்தை சார்ந்த சந்திரசேகரன் - நிஷா மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மற்றும் கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்த வசந்தி ஆகிய இரு ஜோடிகளுக்கும் தூத்துக்குடி சிவன் கோயில் சார்பாக கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் தலைமை குருக்கள் சுப்பிரமணிய பட்டர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் 36 வருடங்களுக்கு பிறகு சந்தித்த பள்ளி மாணவர்கள்- ஆசிரியர் தின விழா கொண்டாடி மகிழ்வு!