தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய சூர்யா ரசிகர்கள்! - தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 100 பேருக்கு இலவச ஹெல்மெட்

தூத்துக்குடி: சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் நேற்று வெளியானதையொட்டி, தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் நூறு பேருக்கு இலவச தலைக்கவசங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழங்கினார்.

Tuticorin

By

Published : Sep 21, 2019, 11:52 AM IST

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் அளித்துவருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில், பர்னாந்து சிலை அருகே நூறு பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைக்கவசங்களை வழங்கினார்.

தூத்துக்குடி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் நூறு பேருக்கு இலவச தலைக்கவசம் வழங்கல்

பின்னர் பேசிய அவர், "நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் சமூக அக்கறையுடன் பொதுமக்களுக்கு தலைக்கவசங்களை வழங்கியுள்ளனர். இதுபோன்ற விழிப்புணர்வு சேவைகளை மற்ற அமைப்புகளும் செய்ய முன்வர வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details