தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி - சிறப்பு தரிசனமா...ரகசிய சந்திப்பா? - etv bharat

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் தூத்துக்குடி சென்றார். அதிமுக தலைவர்களின் அனுமதி பெற்று விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி வருகை
எஸ்.பி.வேலுமணி வருகை

By

Published : Aug 11, 2021, 5:51 PM IST

தூத்துக்குடி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஆக.11) காலை எஸ்.பி.வேலுமணி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

இன்று காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

தொடர்ந்து, மீண்டும் அவர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வந்தார்.

எஸ்.பி.வேலுமணி வருகை

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று மாலையே தூத்துக்குடி வந்து தங்கி விட்டு இங்கு உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிட்டிருந்தேன். நேற்று வரமுடியாத நிலையில் இன்று வந்து திரும்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தலைவர்களின் அனுமதியைப் பெற்று விரைவில் விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துவேன்" என்றார்.

எஸ்.பி.வேலுமணி வருகை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று அனுமதி இல்லாத நிலையில், எந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் அவர் செய்தார் என்பது தெரியவில்லை. மேலும் அவர் தூத்துக்குடியில் ஒருவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தயார் நிலையில் பள்ளிகள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details