ஒட்டப்பிடாரம்:தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அடுத்த புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, "திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து கோபுரத்திற்கு போனாலும் நாளை குப்பைமேட்டிற்கு போவது உறுதி. தமிழ், தமிழ் என்று பிழைப்புக்காக சொல்வது திமுக, ஆனால் தமிழ் என்று உணர்வோடு நிற்பது அதிமுக மட்டுமே. திமுக 500-க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 'ஸ்டாலின்தான் வராரு' 'விடியல் தர போறாரு' எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்.