தூத்துக்குடி:வடஅமெரிக்க கம்மவார் சங்கம் (கானா) சார்பில் கோவில்பட்டி பகுதியில் உள்ள கயத்தாறு, வில்லிசேரி, கழுகுமலை, இளையரசனேந்தல், கீழஈரால் ஆகியவற்றில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அடங்கிய யானையாக இருந்தால் ஊருக்குள் வலம் வரும். அடங்காத யானையாக இருந்தால் காட்டில் தான் திரியும். அதிமுக இமாலய வெற்றி பெற்ற போதும் அடக்கமாகத்தான் இருந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் 13 மணி நேரம் மின்தடை இருந்தது.
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலம்