தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை - Thoothukudi news

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 313வது பிறந்தநாளை ஒட்டி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை
வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை

By

Published : Jul 11, 2023, 2:13 PM IST

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 313வது பிறந்தநாளை ஒட்டி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் முத்துக்கோன் – பாக்கியத்தாய் அம்மாள் தம்பதி ஆவர். இந்த தம்பதிக்கு கடந்த 1710ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று அழகுமுத்துக்கோன் மகனாகப் பிறந்தார். தன் இளம் வயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக இருந்த அழகுமுத்துக்கோன், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியவர்.

இந்த நிலையில் வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று (ஜூலை 11) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவர் பிறந்த ஊரான கட்டாலங்குளத்தில் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் மணிமண்டபம் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு, அங்கு வீரன் அழகுமுத்துக்கோனின் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு சார்பிலும், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டும் வீரன் அழகுமுத்துக்கோனின் 313 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி, கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவராவ் மற்றும் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டு உள்ள திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

முன்னதாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்து உள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:Former Minister Kamaraj: சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details