தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர் மங்கலத்தில் அம்மா மைதானம் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கிழக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று (30.09.2023) நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜ் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கடம்பூர் ராஜூ அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், “நாங்கள் மட்டும் ஜெயித்து வந்தால் பால் ஆறும், தேன் ஆறும் ஓடும் என்று சொன்னார்கள். இன்றைக்கு ரத்த ஆறுதான் ஓடுகிறது. இன்றைக்கு சட்ட ஒழுங்கு அந்த அளவுக்கு கெட்டுப்போயுள்ளது.
நாட்டு மக்களுக்காக மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். எந்த மதுக்கடையை மூடி இருக்கிறார்கள்? மதுக்கடை வருமானம் முன்பாவது தமிழக அரசுக்கு வந்தது. ஆனால் இன்றைக்கு மதுபானக் கடைகள் மூலம் வரும் வருமானம் எல்லாம் ஸ்டாலின் குடும்பத்துக்கு போகிறது. அதை கலெக்சன் செய்து கொடுத்தவர் இன்றைக்கு ஜெயிலில் இருக்கிறார். இந்திய அரசியலிலேயே ஓர் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் இன்றைக்கு சிறையில் இருப்பது தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவு.
இதையும் படிங்க: அதிமுகவும் பாஜகவும் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்