தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கோடாங்கிபட்டி என்னும் பகுதி அருகே, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிமுக பிரமுகரிடமிருந்து 18 லட்சம் பறிமுதல்! - flying squad
தூத்துக்குடி: விளாதிக்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அதிமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் வராத ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
![அதிமுக பிரமுகரிடமிருந்து 18 லட்சம் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3013835-thumbnail-3x2-currency.jpg)
கோப்புப்படம்
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தக்கோரியும் நிற்காமல் சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் படித்த பறக்கும் படையினர் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 18 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த காரில் இருந்தவரிடம் செய்த விசாரணை, அவர் அதிமுக கட்சி பிரமுகர் செல்வராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.