தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு தூத்துக்குடி:ஆங்கில புத்தாண்டு விழா நாளை (ஜன.01) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூக்களை வாங்க தூத்துக்குடி பூச்சந்தையில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்த அளவே பூக்கள் வருவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ கிலோ 2ஆயிரம் வரையும் பிச்சிப்பு கிலோ 2ஆயிரம் வரையும் கனகாம்பரம் ஆயிரத்து 500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சென்டு, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் கிலோ 200 வரை விற்பனையாகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டி, பெங்களூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல வண்ணங்களிளான ரோஜா பூக்கள், காரனேசன், ஜெரிபுரா உள்ளிட்ட பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு ரோஜா 20 ரூபாய் என விற்பனை செய்யப்படும் நிலையில், ரோஜா பூக்களை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க:New year celebration: தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன?