தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் மகராஜன் நேற்று நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோமஸ்புரம் இசக்கியம்மன் கோவில் அருகே ஐந்து பேர் சந்தேகபடும்படியாக நின்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த ஐந்து பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் அவர்களை சோதனை செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த சுமார் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.