தூத்துக்குடி:தூத்துக்குடி நகர கடற்பகுதி முத்துக்குளித்தலுக்கு பெயர்பெற்று விளங்கியது. இதன் காரணமாக முத்துநகர் என்றழைக்கப்பட்ட தூத்துக்குடி கடற்பகுதியில் முத்துகள் அழியத்தொடங்கின. தொடர்ந்து 1961ஆம் ஆண்டு முதல் முத்து குளித்தல் தடை செய்யப்பட்டது.
தற்போது முத்து தேவையைக் கருத்தில்கொண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் தனது பொரிப்பகத்தில் முத்துகளை வளர்த்தது. மேலும் அவற்றில் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக பொரிப்பகத்தில் வளர்க்கப்பட்ட முத்துசிப்பிக்குஞ்சுகள் கடலில் இன்று விடப்பட்டன.
மேலும் அதனை கடலில் இருப்பு செய்து வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு அருகேயிருந்து செல்லக்கூடிய கடல் பகுதியில் சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இவை இருப்பு செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். செந்தில்ராஜ், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி பி.எஸ்.ஆஷா ஆகியோர் முத்துசிப்பிக்குஞ்சுகளை கடலில் விட்டனர். கடலில் அடிப்பகுதியில் பெரிய வலைகள் செல்லாத இடுக்குகளுக்கிடையே முத்துசிப்பிக்குஞ்சுகள் விடப்பட்டன.
இந்த முத்துச்சிப்பிகள் சுமார் ஒரு ஆண்டு காலத்தில் முத்தாக உருவாக்கப்பட்டு அறுவடை செய்யப்படும். இதன் வளர்ச்சி மாதம்தோறும் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மீண்டும் முத்து வளர்ப்பதற்காக 5 லட்சம் சிப்பிக்குஞ்சுகள் கடலில் வளர்ப்பு! இதே போன்று வேம்பார் கடல் பகுதியிலும் முத்துசிப்பிக்குஞ்சுகள் கடலில் விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ் மொழியை அரசின் அலுவல் மொழியாக்குக - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்